அரசியல்தமிழ்நாடு

பனை மரம் முறிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார் கனிமொழி எம்பி…

தூத்துக்குடி மாவட்டம், கே.வி.கே.நகர் பகுதியை சேர்ந்த டிரைவரான இசக்கியப்பன் என்பவரின் மகள் முத்துபவானி (வயது 1) என்ற சிறுமி நேற்று (04/07/2022) வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது பலத்த காற்றின் காரணமாக அங்கிருந்த பனை மரம் ஒன்று முறிந்து விழுந்தது பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று (05/07/2022) செவ்வாய்கிழமை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் அத்தை ராஜேஸ்வரியை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி அவர்கள்.

இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.