அரசியல்உலகம்

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தை கைப்பற்றியது ரஷ்யா..! அதிபர் புதின் அறிவிப்பு…

உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷ்ய படை வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 4 மாதங்களை கடந்தும், போரின் தாக்கம் என்பது இன்றும் குறையாமல் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் நாட்டை காலி செய்து விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முக்கிய துறைமுக நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்அறிவித்துள்ளார். அர்ஷ்ய அதிபர் புதினை நேற்று சந்தித்து பேசிய அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கேய் சாய்கு லுஹான்ஸ்க் மாகாணம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தீவிரமான போரில் வெற்றி பெற்றுள்ள ரஷ்ய படையினர் ஓய்வு எடுத்துக்கொண்டு தங்களது திறனை அதிகரிக்க வேண்டும் என புதின் கேட்டுக்கொண்டுள்ளார்.