சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் 312-வது பிறந்தநாள் : நினைவு மண்டபத்தில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கனிமொழி எம்பி .
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் அவர்களின் 312-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (11/07/2022) திங்கள்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கனிமொழி கருணாநிதி எம்பி .
முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு செவிலியர் கல்லூரியில் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்பி
இந்நிகழ்வில் , அமைச்சர் பெருமக்கள் கீதா ஜீவன்,அனிதா இராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திமுக மாநில விவசாய அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்