பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம்..! ட்ரெண்டாகும் போட்டோ…
மாவீரன் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றனர்.மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இந்த படத்தினை இயக்குகிறார்.ஆடை,மண்டேலா படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக அதிதி
நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகை சரிதா,இயக்குனர் மிஷ்கின்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியுள்ளது என்ற தகவலை சில புகைப்படங்களுடன் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.இந்த முதல் நாள் ஷூட்டிங்கில் ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,ப்ரின்ஸ்,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21,மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது,இதனை அடுத்து அயலான் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.