இந்தியா

கடன் பெற்றவர்களை இரவு 7 மணிக்குமேல் தொந்தரவு செய்யக்கூடாது..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி…

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுபவர்கள் மீது, கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வெளியாகி வருகின்றன. கடுமையான சொற்கள் , அவதூறான பேச்சுக்கள் போன்ற கொடுமைகளை தாங்க முடியாமல், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வெளியிட்டது. ஆனால் அவை முறையாக பின்பற்றப்படாததால், நேற்று மீண்டும் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

இதுகுறித்து வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது : “கடன் தவணையை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ஏற்கனவே நாங்கள் பிறப்பித்த விதிமுறைகளை மீறி வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களது கடன் வசூல் முகவர்கள், கடன் பெற்றவர்களை எந்த வகையிலும் வாய்மொழியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இல்லையெனில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது .