அரசியல்தமிழ்நாடு

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலைய ஊழியர்களுடன் தேசியக்கொடி ஏந்தி கேக் வெட்டி கொண்டாடிய கனிமொழி எம்பி…

இன்று (14/08/2022) ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் புதிதாக அமைய இருக்கும் பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம், விமான ஓடுதளம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்றுவரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் கனிமொழி கருணாநிதி எம்பி .

இதனைத் தொடர்ந்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கையில் தேசியக்கொடி ஏந்தி கேக் வெட்டி தொழிலாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் , ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியம், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.