அரசியல்தமிழ்நாடு

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்ற அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் , உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர். இன்று காலை 10:30 மணி அளவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார். குடியரசு துணை தலைவரை சந்தித்தபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Image