வரும் 21 ஆம் தேதி 34வது தடுப்பூசி முகாம்..
நாடு முழுவதும் கோரொனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் விதமாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. வார இறுதிநாட்களில் இதுவரை 32 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இவர்களில் 91.43% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 65.11% பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந்தேதி நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. வழக்கம்போல் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளன. முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அத்துடன் 1.50 கோடி பேருக்கு இந்த 34வது சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.