Covid19உலகம்

தென்கொரியாவில் 1.78 லட்சம் பேருக்கு கொரோனா..! பீதியில் மக்கள்

சீனாவில் உள்ள வூஹான் நகரத்தில் கடந்த 2019ம் ஆண்டு சத்தமின்றி பரவ தொடங்கிய கொடிய நோய் தோற்று தான் கொரோனா வைரஸ் . அன்று பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் இன்று வரை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது .

வைரஸ் உருமாற்றம் காரணமாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் வந்துகொண்டே உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என தொடர்ந்து வைரஸ் உருமாற்றம் அடைந்துகொண்டே வருவதால் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

தடுப்பூசிகள் ஒருபக்கம் போடப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றத்தால் தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை. இருந்த போதிலும் தடுப்பூசி உயிரிழப்பை பெரிய அளவில் குறைத்து வருகிறது.

இந்நிலையில் தென்கொரிய நாட்டில் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 1,78,574 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 1,80,803 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது. தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரு லட்சத்துக்கும் மேல் தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளதால், அங்கு புதிய கொரோனா அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒமைக்ரான் போல் வேறு ஏதேனும் உருமாறிய தொற்று பரவல் உள்ளதா எனவும் சுகாதாரத்துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்நாட்டில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் செய்வதிறியாது திக்குமுக்காடி போய் உள்ளனர்.