அதிமுக பொதுக்குழு விவகாரம் : ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை..
அதிமுக பொதுக்குழு செல்லாது என்கிற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து , ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23 க்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.