பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்..!
அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தியது.
முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய 5 புதிய பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், 3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் பாடத்திட்டம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, தொழில்முனைவோரை உருவாக்குதல், தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.