தமிழ்நாடு

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுமியை நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர்!

சென்னை அடுத்த ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதி சேர்ந்த ஸ்டீபன் ராஜ்- சௌபாக்கியா தம்பதியினரின் மூத்த மகள் டானியா. அரிய வகை பேரி ரோம்பக் வேணும் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆலபி ஜான் வர்கீஸ் மருத்துவ குழுவினருடன் நேரில் சென்று குழந்தையின் மருத்துவ பரிசோதனையை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுமி தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 23 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டானியாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

10 பேர் கொண்ட மருத்துவ வல்லுனர்களால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், 6வது நாளான இன்று சிறுமி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.