அரசியல்தமிழ்நாடு

அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு துறைவாரியாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டு திட்டபணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது. துறைவாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை, வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனைப்படுவது வழக்கம் .

முதலமைச்சர் முக ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்துத் துறை செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது.