தைவான் நிலநடுக்கம் : 17 பேர் பலி.. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பதைக்க வைக்கும் காட்சிகள்…
சீனாவை ஓட்டிய தைவானில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலையில் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் நேற்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 2 ஆக பதிவானது. குறிப்பாக தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் , கட்டிடங்கள், பாலங்கள் போன்றவை சீட்டுக்கட்டுகளை போல் சரிந்து விழுந்தன. ஜியாங்சு, லியோசி மலை பாதைகளில் வாகனங்கள் சென்ற போது திடீரென ஏற்பட்டு நிலநடுக்கத்தால் பாறைகள் உருண்டும், மண் சரிந்தும், மரங்கள் சாலைகளில் விழுந்தும் விபத்து ஏற்பட்டன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மன்சரிவில் சிக்கிக்கொண்டனர்.
புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிக அளவு நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கு அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. தைவான் மூழுவதும் பல இடங்களில் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவளாங்களும் சேதமடைந்துள்ளதால் ரயில் சேவையும் முடங்கிப்போயுள்ளது. மோசமான வானிலையால் விமான சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.