அரசியல்தமிழ்நாடு

கனிமொழி எம்பி தலைமையில் ஏராளமான மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்..!

தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் S.U.P.S. நாகராஜா அவர்களின் தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகி கனிமொழி கருணாநிதி எம்பி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் , சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னப்பாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, சின்னமாரிமுத்து, கோவில்பட்டி நகரச் சேர்மன் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.