தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார் கனிமொழி எம்பி…
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளவேலங்கால் பகுதியில் ஊரக விரிவான பள்ளி கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் அரியவன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்பி.
இந்நிகழ்ச்சியில் , சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி, பள்ளி முதல்வர் விஜயலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்