திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு
அண்மையில் நடைபெற்று முடிந்த திமுகவின் 15-வது பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்ட கனிமொழி கருணாநிதி எம்பி இன்று , தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்ததையடுத்து அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆணந்தசேகரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்