அரசியல்இந்தியா

பட்டா கிடைக்கவில்லை என புகார் கூறிய பெண்ணை கன்னத்தில் அறைந்த அமைச்சர்

நில பட்டா கிடைக்கவில்லை என்ற புகார் கூறிய பெண்ணை கர்நாடக மாநில அமைச்சர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தில் நில பட்ட வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பங்கேற்க கர்நாடக மாநில உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வி.சோமண்ணாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை 3.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்த நிகழ்ச்சி 2 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர், பட்டாக்களை வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண்னுக்கு பட்டா வழங்கப்படாத நிலையில் அந்த பெண் அமைச்சரிடம் சென்று முறையிட்டார். இதில் ஆத்திரமடைந்த அமைச்சர் பெண்ணை கன்னத்தில் பளார் என அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அறைந்ததையும் பொருட்படுத்தாமல், அந்த பெண் அமைச்சரின் காலில் விழுந்து பட்டா வழங்க வேண்டும் என கேட்டு கொண்டதும் வீடியோவாக பதிவாகியுள்ளது. நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் அந்த பெண்ணை அழைத்து மன்னிப்பு கோரியதாகவும், பட்டா வழங்க ஏற்படுவதாக செய்வதாக உறுதியளித்துள்ளார்.