வீட்டில் இருந்த மதுவை குடித்துவிட்டு அங்கேயே தற்கொலை செய்துகொண்ட கொள்ளையன்..!
பெங்களூரு நகரில் இந்திரா நகர் என்ற பகுதியில் பூட்டி வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த மதுவை அருந்தி சமைத்து உணவு சாப்பிட்ட பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கொள்ளையனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் உள்ள இந்திரா நகர் என்ற பகுதியில் ராய் என்ற தொழிலதிபரின் வீடு உள்ளது அவர் தனது குடும்பத்தாருடன் வெளிநாடு சென்று விட்டு கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டை திறக்க முயற்சித்த போது வீட்டை திறக்க முடியவில்லை. பின் வழியாக கதவை திறக்கும் முயற்சித்த போதும் கதவை திறக்க முடியாத காரணத்தினால் காவல்துறையை உதவிக்கு அழைத்த நிலையில் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது பூஜை அறையில் மர்ம நபர் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு அவர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
வீட்டின் கதவை உடைத்து கடந்த புதன்கிழமை வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை எண் வீட்டிலிருந்த விலை உயர்ந்த மதுபானங்களை அருந்திவிட்டு அதே வீட்டில் சமைத்து உண்டு பின்பு நன்றாக தூங்கி எழுந்து மீண்டும் குடித்துவிட்டு திடீரென பூஜை அறைக்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தற்கொலை செய்து கொண்ட நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் வயது 46 என்பது தெரியவந்தது இவர் மீது பெங்களூரு காவல்துறை கிழக்கு மண்டலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவில் இவரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் திலீப் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துள்ளார்.