கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது அணு உலையில் டர்பைன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அணு உலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலாவது அணு உலையில் மட்டும் தற்போது ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
