இந்தியா

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் :ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்..!

இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில்; நிறைவேற்றப்பட்டதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசு கூறியுள்ளார்.அதேபோல், பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையில் மசோதா எளிதாக நிறைவேறியது. இன்று செனட் சபையில் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்திலும், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.


ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஆஸிரேலியா, இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் காரணமாக, நமது வர்த்தக உறவுகளின் முழுத்திறனை வெளிக்கொண்டு வரவும், பொருளாதார வளர்ச்சியை தூண்டவும் இது உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கையெழுத்தானது என்பத குறிப்பிடத்தக்கது.