தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபம்- விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை காலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி கருவறையின் முன்பு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து நாளை மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சி, மேல்மலையனுர், அவலூர்பேட்டை, மேல்பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.