தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பலியானோர் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியாக தலா ரூ.5 லட்சத்தை வழங்கினார் கனிமொழி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 நபர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிவாரண நிதி உதவியோடு, கூடுதலாக ரூ.5 இலட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (10/12/2022) சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார் கனிமொழி எம்பி.
மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.