அரசியல்இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என எம்.பி.க்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து, திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னதாகவே இன்று மக்களவையை அவைத் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அதே போன்று மாநிலங்களவைத் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர்தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

எம்.பி.க்களின் கோரிக்கையினாலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாலும் கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா தெரிவித்தார். முன்னதாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 23-ஆம் தேதி முடிக்க மக்களவையின் வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.