Covid19இந்தியாஉலகம்

சீனாவுக்கு மருந்து வழங்க தயார் – மத்திய அரசு அறிவிப்பு.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் 15 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், 2019 இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.இங்கு, மக்கள் நடத்திய போராட்டங்களை தொடர்ந்து, சீன அரசு பல கட்டுப்பாடுகளை விலக்கியது. இதையடுத்தே கொரோனா வைரஸ் பரவல் அங்கு அதிகரித்துள்ளது.

இந்த புதிய அலையால், சீனாவில் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்றும், அதிகளவில் உயிர் பலி இருக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் வாயிலாக கணிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படுவதுடன்.நாள்தோறும் 5,000 பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சீனாவில் கோவிட் பாதிப்பு அதிகம் இருப்பதால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா தரப்பில் காய்ச்சல் மாத்திரை மற்றும் ஊசி , மருந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.