விஜய் சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்..! கனவு இயக்குனருடன் பணிபுரியும் அரிய வாய்ப்பு…
ராஜ் கமல் ஃபில்ம் இன்டர்நேஷனல் மூலமாக கமல் நிறுவன தயாரிப்பில் பல படங்களை கொண்டு வர உலக நாயகன் திட்டமிட்டு பலரோடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
அப்படி, உதயநிதி ஸ்டாலின் நடிக்க கமல் இயக்கி, தயாரிக்கும் விதமாக ஒரு படத்தை ஒப்பந்தம் செய்து வைத்து இருந்தார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வந்து விட்டதால் அவரின் கடைசி படம் “மாமன்னன்” தான் என அறிவிப்பு வெளியிட்டு கமல் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த படத்துக்கு விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல் ஹாசன். இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.