Covid19தமிழ்நாடு

கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..

கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விமான பயணிகளில் 2 சதவிகிதம் ரேண்டம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்காக 72,000 படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உருமாறிய கொரோனா பரவல் குறித்து மக்களுக்கு அச்சம் வேண்டாம். ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஜெனரேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் தேவையான அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தலைமையில் நடந்த காணொலி கூட்டத்தில் நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்..