அரசியல்தமிழ்நாடு

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கும் கேப்டன் விஜயகாந்த்…

புத்தாண்டு தினத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதன்படி வரும் புத்தாண்டு தினத்தில் (01.01.2023) சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகை தரவுள்ளார்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கேப்டனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம். கழகத்தை சேர்ந்த அனைவரும், பொதுமக்களும் நேரில் வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கேப்டன் விஜயகாந்த், தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து தொண்டர்களை சந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்தாண்டு அன்றுதான் கேப்டன் சந்திக்க உள்ளார் என்பதால் தொண்டர்கள் உற்சகமடைந்துள்ளனர்.