சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் : தகனக் கூடங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க தகனக் கூடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய கொரோனா உலகையே ஆட்டி படைத்தது. பின்னர் பல்வேறு கொரேனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு நகரங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பெய்ஜிங், செங்டு உள்ளிட்ட நகரங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க தகனக் கூடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.