ஆன்மீகம்இந்தியா

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் – பக்தர்கள் பரவசம்

சபரிமலை மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தந்திரி கண்டரரூ ராஜீவர் திறந்துவைத்து மகா தீபாராதனை காட்டினார்.தொடர்ந்து 31.12. 2022 அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். 8 மணி முதல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து பிற்பகல் 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் பொன்னம்பலம் மேட்டில் மகர ஜோதி மற்றும் மகர நட்சத்திரம் தோன்றும் இந்த நிகழ்வை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கினர். மகர ஜோதி என்பது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் மூன்று முறை காட்சி தருவதை குறிப்பாகும்.

இதனை தொடர்ந்து மகர விளக்கு பூஜையை ஒட்டி, ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர்.