ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த உதவி இயக்குனர்..! சாந்தனு பதிவிட்ட உருக்கமான பதிவு
நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென சினிமாவில் இடம் பிடித்தவர் பாக்யராஜ். இவரின் மகன் சாந்தனு சக்கரக்கட்டி, மாஸ்டர், முப்பரிமாணம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சாந்தனு இராவண கோட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவர், ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குனரின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்,” நேற்று என்னுடைய நண்பனை இழந்துவிட்டேன். 26 வயது தான் ஆகிறது. அவன் மிக திறமையான உதவி இயக்குனர், அவனுக்கு எந்த வித தவறான பழக்கங்கள் இல்லை. ஆரோக்கியமாக தான் இருந்தான், ஆனால் அவனை கடவுள் சீக்கிரமாக அழைத்து சென்றுவிட்டார்.
அவன் கீழே சரிந்து விழுந்த சில நிமிடங்களில் இறந்து விட்டார். இதில் மோசமான விஷயம் என்னவென்றால். அவன் இறப்பதற்கு முன்பு எனக்கு மொபைல் போனுக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அந்த சமயத்தில் என்னால் அவரின் அழைப்பை எடுக்க முடியவில்லை. வாழ்க்கையின் அடுத்த நிமிடம் நிச்சயமற்றது அதனால் வெறுப்பு, ஈகோ அனைத்தையும் மறந்து விட்டு , மகிழ்ச்சியாக வாழ்வோம்” என்று கூறியுள்ளார்.