விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் – இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் விலகல் ..

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் மும்மரமாக விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அபரா வெற்றி பெற்று தொடரை கெத்தாக கைப்பற்றியது. ஒருநாள் தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து டி20 தொடர் நடைபெறவுள்ளது.

முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு நடக்கிறது. ஒருநாள் தொடரில் இடம்பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் தொடரில் ஆடிய ஒரு சில வீரர்கள் மட்டுமே 20 ஓவர் அணியில் இடம்பெற்று உள்ளனர்.

அதிரடி அல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ருத்துராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். தீவிர பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தகால் அவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் காயம் காரணமாக அவர் விளையாடாதது குறிப்பிடதக்கது. அண்மையில் நல்ல பார்முடன் விளையாடிய முக்கிய வீரர்களில் ருத்துராஜ் கெய்க்வாட்டும் ஒருவர் .