ஈரோடு இடைத்தேர்தல் : சத்தமின்றி வேட்பாளரை மாற்றிய நாம் தமிழர் கட்சி..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், வேட்டு மனு தாக்கல் ஆறாவது நாளான இன்று மொத்தம் 13 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்று வேட்பாளராக சீதாலட்சுமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் அகில இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக கட்சியின் தேசிய தலைவர் பேராயர். காட்ப்ரே நோபுள் என்பவர் சுயேட்சையாகவும், கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான திருச்சி , ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த K.P.M.ராஜா , சுயேட்சையாகவும், அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிரேம்நாத் , இந்திய குடியரசு கட்சி(சிவராஜ் அணி) நிர்வாகி திருவள்ளூரை சேர்ந்த E. மணி, காந்திய இயக்கவாதியான ஓட்டுநர் கே. மணிகண்ணன், ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது ஷபீழ், ஈரோடு தனியார் நிறுவன ஊழியர் ஜி. புருஷோத்தமன், மொடக்குறிச்சியை சேர்ந்த ஓட்டுநர் ரவிச்சந்திரன், ஈரோடு சண்முகம், ஈரோடு சுந்தர்ராஜன், ஈரோடு பெரியார் நகர், அன்பு மாணிக்கம் , ஈரோடு குப்பைக்காடு பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயன் என மொத்தம் 13 பேர் இன்று சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ள நிலையில் இன்று 13 பேரும் சேர்த்து மொத்தம் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் தென்னரசு தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்ய உள்ளார்.