தமிழ்நாடு

கரூரில் உள்ள 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம் – ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு…

வைரமடையில் இருந்து கரூர் வரையிலான இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த 137 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சாலையாகும். இச்சாலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் கனரக சரக்கு வாகன கட்டுமான தொழிற்சாலைகள். ஜவுளி தொழிற்சாலைகள், கல் குவாரி போன்றவைகள் அமைந்துள்ளன.மேலும் இச்சாலையானது உள்ளீட்டு மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் முக்கிய சாலையாகும்

இந்த சாலையானது கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி ஆகிய முக்கிய மாவட்டங்களை இணைக்கும் சாலையாக அமைந்துள்ளது. மேலும் இச்சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்து செரிவு மற்றும் சாலை பாதுகாப்பினை வரை கருத்திற்கொண்டு இச்சாலையை இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்த ரூ.137.25 கோடி மதிப்பிற்கு ஒன்றிய அரசிடம் நிர்வாக ஒப்புதல் மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இப்பணி முடிவுபெற்றபின் இச்சாலையானது போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலை பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.