விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Live | IND vs AUS 1st Test Day 1 Score: Rohit Fifty Helps India End Day On  A High After Bowling Australia Out For 177

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற இன்று காலை நாக்பூரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். கவாஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகினார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து அணியை மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்களிலும், ஸ்மித் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மாட் ரென்ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேர 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த பேட் கம்மின்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து ஆடி 31 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை கடந்தார். இதனால் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகள் எடுத்த 3வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.