பிரதமர் மோடி உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர்..! தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு..
நாகாலாந்து சட்டசபை தேர்தலையொட்டி, மான் டவுன் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார் .
அங்கு அவர் கூறியதாவது : பிரதமர் மோடி, உலகம் முழுவதும் மதிக்கப்படுபவர். நாட்டின் 80 கோடி ஏழைகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கியவர். அப்படிப்பட்ட எங்கள் அன்புக்குரிய தலைவர் பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பயன்படுத்திய வார்த்தை கண்டனத்துக்குரியது.
ராகுல்காந்தி தலைவர் ஆனதில் இருந்து காங்கிரசின் தரம் நாளுக்குநாள் சரிந்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொலைநோக்கி வைத்து பார்த்தால் கூட காங்கிரசை பார்க்க முடியாது என்று ராகுல்காந்திக்கு சொல்லிக் கொள்கிறேன். அந்த அளவுக்கு ஓட்டுச்சீட்டு மூலமாக மக்கள் பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.