நான் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றால் ஒரே நாளில் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்திவிடுவேன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சர்ச்சை பேச்சு
அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றால், உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்திவிடுவேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேரிலேண்டில், ஆதரவாளர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது :
ரஷ்ய அதியர் புடின் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், தனது பேச்சுக்கு நிச்சயம் செவி சாய்ப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், தன்னால் மட்டும் தான் மூன்றாம் உலகப்போர் நேராமல் தடுக்க முடியும்
என்றார்.
இரு நாடுகளுக்கிடையே 1 வருடத்திற்கு மேலாக கடுமையான போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இப்படி கூறிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும் போரை நிறுத்த அபிராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ரஷ்யா அதிபர் நெருக்கிய நண்பராக இருக்கும் பட்சத்தில் போரை நிறுத்த சொல்லி ஒரு போன் கால் செய்தலே போதும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் .