ஆஸ்திரேலியாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பதிவான வெப்பம் – வானிலை ஆய்வு மையம்
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி உட்பட ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவில் இன்று வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேற்கு சிட்னியில் உள்ள புறநகர் பகுதியான பென்ரித்தில் இன்று பிற்பகல் 40.1 டிகிரி செல்சியசும், உள்பகுதியில் உள்ள சில நகரங்களில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் வரை வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நலையில், நியு சவுத் வேல்ஸில் கடும் வெப்பம் காரணமாக ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.