அரசியல்இந்தியா

ராகுல் காந்தியின் ஜாமீன் ஏப்ரல் 13ம் தேதி வரை நீட்டிப்பு ..!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி, குஜராத்தின் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி மேல்முறையீட்டுடன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு விசாரணையை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராகுல் மேல்முறையீடு செய்து, தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பெறவில்லை எனில், அவரது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கும். அதோடு அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது .