அரசியல்தமிழ்நாடு

ஆடு, மாடு, கோழி என பலத்த சீர் வரிசையுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜயபாஸ்கர்

சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் தங்கி உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்தார் . அப்போது வாழைப்பழம், பலாபழம், மாம்பழம் என பல்வேறு வகையான பழங்களை கொண்ட 30 தட்டுகள் மற்றும் ஆடு, பசு மாடு, கன்று குட்டி, கோழி உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக வந்து எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர் கூறியதாவது :

அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து கழகம் ஒரு எழுச்சி கண்டுள்ளது. இனி முழுவேகத்தோடும் முழுமையான வலிமையோடு அதிமுக மிளிரும்.

கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் தெளிவுபடுத்திவிட்ட பிறகு இது போன்ற கருத்து தொடர்பான கேள்விகள் இனி தேவையில்லை. மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து வரபெற்ற தகவலை அடுத்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கொரோனாவை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார் .