அதிமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவதே இலக்கு – எடப்பாடி பழனிசாமி அதிரடி..
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை இன்று தொடங்கி வைத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – அதிமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்துவதே இலக்கு என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு மற்றும் உறுப்பினர்கள் புதுப்பித்தல் விண்ணப்பப் படிவங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விசுவநாதன் செங்கோட்டையன் தங்கமணி வேலுமணி டாக்டர் விஜயபாஸ்கர் காமராஜ் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,தற்போது அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அதை இரண்டு கோடியாக உயர்த்துவதே இலக்கு. 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம் இந்த நல்ல நாளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளதால் அதிமுக ஓஹோ என வளரும். பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று பிறந்த 75 குழந்தைகளுக்கு தங்கமோதிரம், தொட்டில், மற்றும் பரிசு பெட்டகம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
