மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – தினசரி பாதிப்பு 5000ஐ தாண்டியது
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 3 ஆயிரம், 4 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த திங்கள் கிழமை இந்தியாவில் 3823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நேற்று முன் தினம் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்தியாவில் 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்றை விட 20 சதவீதம் அதிகம் ஆகும்.
ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.