தமிழ்நாடு

தமிழகத்திற்கு வருவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது : “தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகளை கொண்டது. முன்னணி சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் இருப்பிடமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ் புத்தாண்டு கொண்டாட சில தினங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் புத்தாண்டு புதிய தொடக்கமாக அமையும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மக்களுக்கு பயன் தர உள்ளன. விமானம், ரயில்,சாலை என பல கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவாக கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 5 மடங்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா புரட்சி செய்துவருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு ரயில்வே திட்டங்களை செயல்படுத்தும் வேகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது 4 ஆயிரம் கி.மீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 600 கி.மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. துறைமுகங்களின் திறன் மேம்பாடும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 380 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகள் தற்போது 66-ஆக உள்ளன.தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார் .