கொளுத்தும் கோடை : தூத்துக்குடி பொதுமக்களின் நலன்கருதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் கனிமொழி எம்பி..
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு, தூத்துக்குடி பொதுமக்களின் நலன்கருதி இன்று (15/04/2023) சனிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகர் மற்றும் ஜோதிபாசு நகர் விளக்கு ஆகிய பகுதிகளில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் பழங்களை வழங்கினார் கனிமொழி எம்பி .
இந்நிகழ்வில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒன்றிய செயலாளர் சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
