ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – இன்றைய போட்டியில் ஐதராபாத்-மும்பை அணிகள் மோதல்..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
10 அணிகள் பங்கேற்கும் 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 25வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஏய்டன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (லக்னோ, ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.
மும்பை அணியை பொறுத்தவரையில் தொடக்க இரு ஆட்டங்களில் பெங்களூரு, சென்னை அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், அதன் பிறகு டெல்லி, கொல்கத்தா அணிகளை தோற்கடித்தது. இந்நிலையில், தற்போது ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்து களம் காணுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.