2023 குரு பெயர்ச்சி பொது பலன்கள்…!
2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அதிகாலை 5.14 மணிக்கும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இரவு 11.26 மணிக்கும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ச்சி ஆனார்.
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் – சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.
இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.
சோபகிருது வருஷம் உத்திராயணம் சிசிரருது முடிந்து வஸந்து ருது சித்திரை மாதம் 9ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 22.04.2023 சுக்லபட்சம் துவிதியை திதி, சனிக்கிழமையும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறிஇருக்கிறார்.
2023 குரு பெயர்ச்சி பொது பலன்கள்.
மிதுனம், சிம்மம், துலாம் ,தனுசு , மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களும், மிக நல்ல யோக பலனை அடைய இருக்கிறார்கள்.
மேற்சொன்ன ஐந்து ராசிக்காரர்களுக்கும் பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வருமானம் வரும் காலகட்டங்களில் ,அதை சேமித்து வைப்பது,எதிர்காலத்தை சிறப்பானதாக்கும்.
குரு பலம் வந்து விட்டதால் திருமண வயதை ஓட்டி, சுயசாதகத்தில் களத்திர பாவகங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு திருமணமும், குழந்தை பாக்கிய அமைப்புகளும் விரைவில் கிடைக்கப்பெறும்
மகர, கும்ப ராசிக்காரர்கள் சாதகமாக அல்லாத பலனும், பாதகமாக இல்லாத பலனும் என்ற நிலையில் ,சமநிலை அமைப்பில் பலனை பெறுவர்.
விருச்சிக ராசிக்கு குரு ஆறில் மறைந்தாலும் ,தன்னுடைய ராசிநாதன் வீட்டிலேயே மறைகிறார் என்று அமைப்பிலும்,செவ்வாய் குருவிற்கு நட்பு கிரகம் என்பதாலும், குரு ஆறில் மறைவது ,விருச்சிக ராசிக்கு பெரிய அளவில் பாதிப்பை தராது. சுப கடனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பில் இருக்கும் . அதை நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்ளவும்.
மேஷ ராசிக்கு, ஜென்மத்தில் குரு வந்தாலும், ராசிக்கு பாக்யாதிபதி என்பதால் ,பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனியுடன், ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்வதால், தொழில் சார்ந்த அமைப்புகளில், மிக மிக எச்சரிக்கை தேவை.
புதிய தொழில் ஆரம்பிப்பதும், புதிய முதலீடு செய்வதும் தற்போதைய நிலையில் நல்ல பலனை நிச்சயமாக தராது என்பதால் கடக ராசிக்காரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த குரு பெயர்ச்சியில் கன்னி, ரிஷப ராசிக்காரர்கள் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தைத் தேவையறிந்து சிக்கனமாக செலவழிப்பது நல்ல பலனை தரும்.
குழந்தைகளின் வழியில் சில தொந்தரவுகள் ஏற்படும் என்பதால் ,அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
குரு ,சுய ஜாதகத்தில் பலமாக இருப்பவர்கள் , கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் லக்னத்திற்கு குரு யோக கிரகமாக இருந்தாலும் கோச்சார குரு பெரிய அளவிற்கு பாதிக்காது.
குரு பாதகமான நிலையில் இருப்பவர்கள் ,ஒருமுறை உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனை வணங்கி, குருவிற்கு கொண்டக்கடலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருவது, சகல தோஷத்தையும் சரிகட்டும்.
சுய ஜாதகத்தில் நல்ல யோக தசா புத்திகள் மற்றும் பாதகமான தசா புத்திகளுக்கு ஏற்ப, குருபலன் ஏற்ற இறக்கமாக அமையும்.சுயஜாதகமே முழுமையாக பேசும்.
ஏழரைச் சனி, அஷ்டம சனி நடக்கும் போது சனியின் தாக்கமே அதிகம் இருக்கும் என்பதால் ,மீன ராசிக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் குரு வந்தாலும், ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் உள்ளோம் என்பதை அறிந்து ,அதற்கு ஏற்ப தேவை அறிந்து செலவழித்துக் கொள்வது நல்லது.
குரு பகவானின் சொந்த வீடுகள் இரண்டு: தனுசு மற்றும் மீனம்
குரு பகவானின் உச்ச வீடு:கடகம்
குரு பகவானின் நீச வீடு: மகரம்
குரு பகவானின் நட்பு வீடுகள்: மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்
குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே!
குரு பகவானின் பகை வீடுகள்: ரிஷபம், மிதுனம், துலாம்,
சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் குருவிற்கு 100%
வலிமை இருக்கும்.
குரு, சந்திரன் சேர்க்கை குருச்சந்திர யோகம்
அல்லது ஏழாம் பார்வையாக சந்திரன் பார்த்தாலும், அல்லது
குரு இருக்கும் இடத்தில் இருந்து 5ம் அல்லது 7ம்
9ஆம் பார்வையாகச் சந்திரனைப் பார்த்தாலும்
கஜகேசரி யோகம்
இந்த ஆண்டு குரு பெயர்ச்சி அனைவருக்கும் ஏற்றமும் மாற்றமும் உண்டாகும் ஆண்டாக அமையட்டும்