உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள தொழிலாளர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி
மே-1, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி.

இந்நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
