உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படம் நிச்சயம் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் – பிரபலங்கள் நம்பிக்கை..
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன் . இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் தாறுமாறான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் ,கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பா.ரஞ்சித் ,மாரி செல்வராஜ்,கமல்ஹாசன் ,சிவகார்த்திகேயன் ,கவின் ,விக்னேஷ் சிவன், மூத்த நடிகர் விஜயகுமார் விழாவின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர் .

அப்போது விழாவில் பேசிய மாரி செல்வராஜ் கூறியதாவது : மாமன்னன் படத்தில் நான் சமூகநீதி அரசியலை பற்றி அழுத்தமாக பேசியுள்ளேன் அதேபோல் நான் இன்னும் எத்தன படம் பண்ணாலும் அதுல சமூகநீதி கண்டிப்பா இருக்கும் என இயக்குநர் மாரி செல்வராஜ் .
இந்த படம் எனக்கும் உதயநிதி அவர்களுக்கும் மிக பெரிய படமாக அமையும் என்றும் இந்த படம் நிச்சயம் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்றும் கூறியுள்ளார் .
விழாவில் பேசிய உதயநிதி கூறியதாவது : கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தேன். அதற்குள் அமைச்சர் பதவி கிடைத்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
இன்னொரு படம் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன் என உறுதி அளித்துள்ளேன். ஆனால்3 ஆண்டுகளுக்கு நான் படம் பண்ணும் வாய்ப்பு இல்லை.
விழாவில் பேசிய மூத்த நடிகர் விஜயகுமார் கூறியதாவது : எம் ஜி ஆர் அமைச்சராக நடித்த கடைசி படத்தில் நான் நடித்திருந்தேன் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதியின் கடைசில் படத்தில் நடிப்பதில் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.