உலகில் முதன்முறையாக தர்மபுரியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தம்..! முழு விவரம் இதோ..
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் சேலம்-பெங்களூரு சாலையில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.
உலகின் முதன்முறையாக சூரிய ஒளி மின்சக்தி மூலம் அதி நவீன வசதிகளுடன் இந்த குளிர்சாதன இரண்டு அடுக்கு பேருந்து நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி இந்த நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிழல் கூடத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இரண்டடுக்கு தளத்தில் இருக்கை வசதி, தானியங்கி பரிவர்த்தனை இயந்திரம், ஏ.டி.எம் மையம், சிறப்பு அங்காடி, தானியங்கி சூரிய மின் சக்தி நிலையம், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி, அதிநவீன வர்த்தக விளம்பர எல்.இ.டி பலகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குளிர்சாதன வசதியுடன் தாய்மார்கள் பாலூட்டும் அறை, மினி நூலக வசதி, படிப்பு அறை, தர்மபுரி பண்பலை வானொலியை கேட்கும் வசதி, தொலைக்காட்சி பெட்டி, செல்பி பாயிண்ட், கார்டன் சீட் அவுட், செல்போன் சார்ஜிங் பாயிண்ட் என ஹைடெக்காக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகளை இரவிலும் மக்கள் பார்க்கும் விதமாக மின்னொளியில் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இத்தனை வசதிகளும் உள்ள பேருந்து நிறுத்தம் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.