அரசியல்தமிழ்நாடு

கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி – இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து அண்ணாமலை நெகிழ்ச்சி பதிவு..

நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருக்கமாக பதிவிட்டுள்ளார் .

இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது :

“இசைஞானி இளையராஜா இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து, நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை, இசைஞானி அவர்களது இசை, இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் ஒலித்து மெய்ப்பிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

மொழி, இனப் பாகுபாடின்றி, மக்களின் எல்லா வித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.